Our vision is to be the primary platform that enables volunteers to bond with the public for a social cause leading to a better world, a world of economic and social justice.
Mission
Our mission is to facilitate through various means the development of a dynamic volunteer community to support and assist the public need.
நாம் வாழும் சமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம், அந்த விதை எல்லோர் மனதிலும் இருக்கும். 2015 ஆண்டு ஏற்பட்ட பெருமழையில் விதை முளைத்தது, பெருவெள்ளத்தில் துளிர்விட்டது. பல துளிர்கள் ஒன்று சேர்ந்து D4V என்ற தோட்டம் உருவானது. தகவல் தொடர்பு துறையை எவ்வளவுக்கு எவ்வளவு நல்வழியில் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்துகிறோம், எதற்கு? சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க.
பார்வையற்ற படிக்கும் சகோதரர்களுக்கு பார்வையாய் இருக்கிறோம், மிக அவசரமாக எங்கு குருதி தேவைபட்டலும் சற்று நேரத்தில் குருதி கொடையாளிகளை அனுப்பி வைக்கிறோம், தமிழகத்தை மீண்டும் பசுமையாய் மாற்ற இயற்கை விவசாயத்தை உயிருற்றி கொண்டு இருக்கிறோம், வேலைவாய்ப்புகள் எங்கெங்கு இருக்கிறது என்பதை அறிந்து அதை பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்றோம், கல்வி உதவி இன்றி பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்படும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வி பாதிக்கபடாமல் இருக்க அவர்கள் கல்வி கட்டனத்தை செலுத்துவதில் இருந்து அனைத்து உதவிகளையும் முன்னின்று செய்கிறோம், அதுமட்டும் இல்லாமல் பெண்களை ஆண்களுக்கு ஒருபடி மேலே கொண்டு செல்லும் என்னத்துடன் அவர்களை மேம்படுத்த பயிற்ச்சிகள் அளிக்கப்படுகிறது.